1 | கடன் வகை | சம்பளக்கடன் |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | குடும்பத் தேவைகளை நிறைவு செய்ய |
3 | வயது வரம்பு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். |
4 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | A.அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் குவாசி அரசு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்கள். B.இக்கடனுக்கு ஏற்படும் பிடித்தமும் சேர்த்து மொத்த சம்பளத்தில் 75 சதவீதத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். C.கடன்தாரர் மற்றும் பிணையதாரர் வங்கியின் இணை உறுப்பினராக வேண்டும். |
5 | அனுமதிக்கும் கடனின் அளவு | மொத்த சம்பளத்தில் இக்கடனுக்கு ஏற்படும் பிடித்தம் சேர்த்து 75 சதவீதத்திற்கு மிகாமல் அல்லது ரூ. 7,00,000/-. இதில் எது குறைவோ அத்தொகை கடனாக அனுமதிக்கப்படும். |
6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | ஒரே தவணை வங்கி சேமிப்பு கணக்கு மூலம் |
7 | வட்டி விகிதம் | வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி |
8 | தவணைக் காலம் நிர்ணயம் | 84 மாத சம தவணைகள் |
9 | தவணைத் தொகை செலுத்தும் முறை | மாத சம தவணைகள் |
10 | அபராத வட்டி | 1.5 சதவீதம் |
11 | கடனுக்கு ஈடு/ஆதாரம் | கடன்தாரர் மற்றும் பிணையதாரர் கூட்டாகச் சேர்ந்து எழுதிக்கொடுக்கும் கடன் உறுதி ஆவணம். |
12 | வழங்க வேண்டிய ஆவணங்கள் | A.விண்ணப்பதாரர் மற்றும்பிணைதாரருக்கு அனைத்துப் பிடித்தங்கள் விவரத்துடன் சம்பளப் பட்டுவாடா அதிகாரியிடம் (Pray Drawing Officer) பெறப்பட்ட சம்பளச்சான்று. B.சம்மந்தப்பட்ட பணியாளர் சங்கம் மற்றும் இதர நிதி நிறுவனங்களிடம் கடன் நிலுவையில்லை சான்று. C.கடன் தொகையினை பிடித்தம் செய்த கொடுக்க சம்பளப்பட்டுவாடா அலுவலரின் உறுதி மொழிக் கடிதம். D.விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரரின் ஒப்பந்தக்கடிதம். E.மனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் F.புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று நகல் ( KYC நடைமுறையின்படி) G.CIBIL அறிக்கை H.வங்கி கோரும் இதர ஆவணங்கள் |
13 | பொது | மேற்படி நடைமுறைகளை மாற்ற, புதிய நடைமுறைகளை ஏற்படுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு. |