சுய உதவிக்குழு கடன்

1 கடன் வகை சுய உதவிக்குழு கடன்
2 கடன் வழங்கும் காரியங்கள் சில்லறை வியாபாரம் மற்றும் வியாபார அபிவிருத்தி /கைவினைஞர் மற்றும் மரபுவழி சார்ந்த தொழில்கள் மற்றும் அபிவிருத்தி / தொழில் மற்றும் தொழில் சேவை நிலையங்கள் / விவசாயம் தொடர்பான சிறு தொழில்கள்
3 வயது வரம்பு  18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
4 கடன் பெறத் தகுதியுடையவர்கள் A.சுய உதவிக்குழுவில் அங்கத்தினராக இருத்தல் வேண்டும். மேலும் அந்தக் குழு குறைந்தது ஆறு மாதம் சேமித்தல் மற்றும் கடன் அளித்தல் பணியில் தொடர்ந்து நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும்.
B.சுய உதவிக்குழுவின் அங்கத்தினர் எண்ணிக்கை குறைந்தபட்ச எண்ணிக்கை – 12 அதிகபட்ச எண்ணிக்கை - 20.
C.வங்கியின் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
5 அனுமதிக்கும் கடனின் அளவு ரூ. 10 இலட்சம் வரை
6 குடும்ப வருமானம் ------------
7 மனுதாரரின் சொந்த நிதி 5%
8 கடன் பட்டுவாடா செய்யும் முறை ஒரே தவணை வங்கி சேமிப்பு கணக்கு மூலம்
9 வட்டி விகிதம் வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி.
10 தவணைக் காலம் நிர்ணயம் 36 முதல் 60 மாதங்கள்
11 தவணைத் தொகை செலுத்தும் முறை அசல் மற்றும் வட்டியுடன் மாதா மாதம் திருப்பிச் செலுத்த வேண்டும்.
12 அபராத வட்டி 1.5 சதவீதம்
13 கடனுக்கு ஈடு/ஆதாரம் A.குழு தீர்மானம்
B.குழுவின் வரவு செலவு படிவம்
C.குழு உறுப்பினர்களின் புகைப்படம்
D.குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்டர் சி அக்ரிமெண்ட் கையொப்பமிட்டு சரிபார்க்க வேண்டும்.
14 வழங்க வேண்டிய ஆவணங்கள் A.இருப்பிடச்சான்று
B.குடும்பஅட்டை நகல்
C.உறுப்பினர்கள் கூட்டாக வழங்கும் கடன் உறுதி ஆவணம்.
D.குழுத் தீர்மானம்.
E.மனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்.
F.புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று நகல் ( KYC நடைமுறையின்படி)
G.குழு உறுப்பினர்களின் புகைப்படம்.
H.வங்கி கோரும் இதர ஆவணங்கள்
15 பொது மேற்படி நடைமுறைகளை மாற்ற, புதிய நடைமுறைகளை ஏற்படுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு.