1 | கடன் வகை | சிறுவணிக கடன் |
2 | கடன் வழங்கும் காரியங்கள் | சிறு வியாபாரம், பூ வியாபாரம், காய்கறி வியாபாரம், பழ வியாபாரம், கட்பீஸ் வியாபாரம், பிளாஸ்டிக் வியாபாரம், பெட்டிக்கடை வியாபாரம் மற்றும் இது போன்ற சிறு வியாபாரத்திற்கு |
3 | வயது வரம்பு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். |
4 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | A.பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலர்களுக்கு B.வங்கியின் கிளை ஏரியாவில் சிறு வியாபாரம் செய்பவர்கள் மற்றும் சிறு வியாபாரம் செய்ய உள்ளவர்களுக்கு C.வங்கியின் இணை உறுப்பினராக இருக்க வேண்டும். D.கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரர்கள் வங்கியில் இணை உறுப்பினராக இருக்க வேண்டும். |
5 | அனுமதிக்கும் கடனின் அளவு | ரூ 50,000/- வரை |
6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | ஒரே தவணை வங்கி சேமிப்பு கணக்கு மூலம் |
7 | வட்டி விகிதம் | வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி |
8 | தவணைக் காலம் நிர்ணயம் | 350 நாட்கள் / 50 வாரம் |
9 | தவணைத் தொகை செலுத்தும் முறை | அசல் மற்றும் தினசரி நிலுவை அடிப்படையில் வட்டி கணக்கிட்டு செலுத்த வேண்டும். |
10 | அபராத வட்டி | 1.5 சதவீதம் |
11 | கடனுக்கு ஈடு/ஆதாரம் | கடன் தொகை ரூ 50,000/- வரை இரு நபர் ஜாமீன் ( ஜாமீன் தாரர்கள் அரசு / பொதுத்துறை / தன்னிறைவு பெற்ற நிறுவனங்களில் பணிபுரிபவர் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தவணை தவறாமல் திருப்பி செலுத்தும் செயல் உறுப்பினர் / வங்க்கியின் சார்ந்த கிளையின் இணை உறுப்பினரான வைப்புதாரர்களாக இருத்தல் வேண்டும்.) |
12 | வழங்க வேண்டிய ஆவணங்கள் | A.மனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் B.புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று நகல் ( KYC நடைமுறையின்படி) C.தன்னிலை உறுதிமொழி சான்று D.கடனுக்கு பொறுப்பேற்பவர்களிடமிருந்து (ஜாமீன் தாரர்கள்) தன்னிலை உறுதி மொழி பத்திரம E.CIBIL அறிக்கை F.வங்கி கோரும் இதர ஆவணங்கள் |
13 | பொது | மேற்படி நடைமுறைகளை மாற்ற, புதிய நடைமுறைகளை ஏற்படுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு. |
Copyright @2020 - 2024 Design & Developed by KCC BANK